வியாழன், 21 ஜனவரி, 2016

மனம்

ஆறு பெருக்கெடுத்து ஓடுமதில்,
செம்மை பெற்ற நேச்சல் வீரன்
நிலை பெற்று நிற்கலாகாது.

ஆகவே சீர்பெற்ற பெரியோகள்,
மனதின் ஓட்டத்தை அறவே நிறுத்தக்கோரி
ஆற்றிலே கல்லாய் நிலைத்தனர்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

நானே நீ என்பதா!?

உன்னால் துடிக்கும் இதயம் நானென்பதா?

உன்னால் கிடைத்த உணவை நானென்பதா?

ஊணால் ஆன உடலை நானென்பதா?

உன்னால் ஆன நானே நீ என்பதா?

இறைவா!!!

திங்கள், 11 மே, 2015

தாயே பெரியக்க ஒப்பனை

தன்னையே இறுக்கி சிசுவை இயக்கி,
அளவில்லா அன்புடன் சுழ்ந்தழுத்தி;
தானாய் பிரஜையாய் இயங்கும் வரை,
தன் குருதி உணவாக்கி;
தேவை, நிறை, குறை, அறியும்,
தாயே இறைகுணத்தின் உவமையாம்!


திங்கள், 10 நவம்பர், 2014

உணவுக்கு முன் இறைவனை கேக்கவேண்டியது


அணுவாகி, மண்ணாகி, நீராகி, நெல் மணியாகி,
நெருப்பாகி, உணவாகி, நானாகிய என் இறைவா;
இவை அனைத்தும் உன்பதம் இல்லையேல் குறை! ஆகவே,
இரை, உடல், மனக்குறை நீக்குவாய் இறைவா!!

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இறைவன்

காற்று உலகெங்கும்  நிரம்பி  உள்ளதை அறிந்ததும்,
நம் உடல் காற்றினால் ஆனதாய்  உணர்கிறோம்.

இறைவன் பிரபஞ்சம் எங்கும் நிரம்பி இருப்பதை அறிந்ததும்,
நாம் இறைவனாக இருப்பதாய் உணர்வோம்.


திங்கள், 14 ஜூலை, 2014

மன்னிப்பு

இறைவன் எனும் கருணை உணர,
மன்னிப்பு எனும் மாண்புனர்.

புதன், 20 ஜூன், 2012

தோல்வியின் சுவை


வெற்றி அபின் (ஒபியம்) என்றால் , தோல்வி அதை மருந்தாக ஆக்குகிறது;
வெற்றி திடமான கல் என்றால், தோல்வி அதை சிற்பம் ஆக்குகிறது;
வெற்றி பணம் குவிதல் என்றால், தோல்வி உன்னை மனிதன் ஆக்குகிறது ;
தோல்வியின் சுவை, உன் நாவை வெற்றிக்கு தயார் செய்கிறது.

திங்கள், 16 ஏப்ரல், 2012

மனம் போல் வாழ்வதை விட பொன் போல் வாழ்க...

பொன் போல் மனம் கொண்டவர், தான் தன் தன்மை மாறாது,
நெருப்பில் கருகி, உறை நீரில் இருகி, நடுநிலை எய்துவார்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

தீப ஒளி

"இன்று வானத்தில் வேடிக்கை,
என்றும் வாழ்கையே வேடிக்கை...
நெய் தோய்த்து தீபங்கள் ஒளிஏற்ற,
உன் வாழ்கையில் ஒளியேற,
இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்."

புதன், 6 அக்டோபர், 2010

வாலியின் தமிழ்

வாலியின் புலமையும்,
தமிழின் வளமையும்,
ஒரே வரியில்......

"இன்பத்தை கருவாக்கினாள் பெண்"

----3 அர்த்தங்கள் உள்ளன

திங்கள், 16 பிப்ரவரி, 2009

மழை

தவளைகளின் காதலர் தினம்,
சிறுவர்களின் விடுமுறை தினம்,
மழைத்துளியின் விடுதலை தினம்,
மணலும் மணக்கும் தினம்,
புவிதாகம் தீர்ந்த தினம்.

வியாழன், 16 அக்டோபர், 2008

தத்துவம்

காற்றினால் தன்னில்லை இழந்து,
பறந்து செல்லும் மகரந்தம் தான்..
காற்றை எதிர்த்து நிற்கும் மரமாகிறது...