ஞாயிறு, 19 ஜூலை, 2015

நானே நீ என்பதா!?

உன்னால் துடிக்கும் இதயம் நானென்பதா?

உன்னால் கிடைத்த உணவை நானென்பதா?

ஊணால் ஆன உடலை நானென்பதா?

உன்னால் ஆன நானே நீ என்பதா?

இறைவா!!!

திங்கள், 11 மே, 2015

தாயே பெரியக்க ஒப்பனை

தன்னையே இறுக்கி சிசுவை இயக்கி,
அளவில்லா அன்புடன் சுழ்ந்தழுத்தி;
தானாய் பிரஜையாய் இயங்கும் வரை,
தன் குருதி உணவாக்கி;
தேவை, நிறை, குறை, அறியும்,
தாயே இறைகுணத்தின் உவமையாம்!